சினிமா
அதை நம்பாதீங்க.. கரூர் பேரணி குறித்து நடிகை கயாடு லோஹர் நச் பதிவு!
அதை நம்பாதீங்க.. கரூர் பேரணி குறித்து நடிகை கயாடு லோஹர் நச் பதிவு!
அரசியலில் கவனம் செலுத்தி வரும் விஜய் தொடர்ந்து ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி, கடைசியாக கரூரில் பிரச்சாரம் செய்தார்.அந்த பிரச்சாரத்தில் கலந்து கொண்ட தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள், பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் என மொத்தம் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இது தொடர்பாக பல சினிமா மற்றும் அரசியல் வாதிகள் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.நச் பதிவு! இந்நிலையில், நடிகை கயாடு லோஹர் விஜய் குறித்து பேசியதாக தற்போது பரவி வரும் செய்தி குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.அதில், ” எனது பெயரில் பரப்பப்படும் பதிவுகள் மற்றும் டிவிட்டர் கணக்கு போலியானது. எனக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை, மேலும் அதில் வெளியிடப்பட்ட கருத்துகள் என்னுடையவை அல்ல.கரூர் பேரணியில் நடந்த துயர சம்பவத்தால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன், மேலும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இருப்பினும், கரூரில் எனக்கு தனிப்பட்ட நண்பர்கள் யாரும் இல்லை என்பதையும், துக்கத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு எனது பிரார்த்தனைகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.