விளையாட்டு

அபிஷேக், குல்தீப், திலக் வர்மா, துபே… மொத்தமாக 7 விருதுகளையும் அள்ளிய இந்தியா

Published

on

அபிஷேக், குல்தீப், திலக் வர்மா, துபே… மொத்தமாக 7 விருதுகளையும் அள்ளிய இந்தியா

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 9 ஆம் தேதி முதல் பரபரப்பாக நடைபெற்று வந்த 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இந்தத் தொடருக்கான இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலபரீட்ச்சை நடத்தின. போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பகார் ஜமான் மற்றும் பர்கார் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக மட்டையைச் சுழற்றி வந்த பர்கான் அரைசதமடித்து அசத்தினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில், பர்கான் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சைம் அயூப் 14 ரன்களில் அவுட் ஆக்கினார். தொடக்க வீரர் பகார் ஜமானும் 46 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் 12 ஓவர்களில் 114-2 என வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி, அடுத்த 5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இறுதியில் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமாடியது. இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த கேப்டன் சூரியகுமார் யாதவும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான சுப்மன் கில்லும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் வெறும் 12 ரன்களில் அவுட் ஆகி பெரும் ஏமாற்றம் அளித்தார். இதன் பின் இணைந்த திலக் வர்மா – சஞ்சு சாம்சன் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.இருவரும் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்திட்ட நிலையில், சஞ்சு 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய திலக் வர்மா அரை சதம் அடித்தார். அவருக்கு சிவம் துபே பக்கபலமாக இருந்து 33 ரன்கள் எடுத்தார். கடைசி வரை களத்தில் இருந்த திலக் வர்மா 69 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது. இதன் மூலம் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 9-வது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரில் மாற்று இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி வீரர்களான அபிஷேக், குல்தீப், திலக் வர்மா, துபே ஆகியோர் மொத்தமாக 7 விருதுகளை வென்று அசத்தினர். அதன்படி, ஆட்டத்தின் நாயகன் விருதை திலக் வர்மா வென்று அசத்தினார். ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய வீரர் விருதை சிவம் துபே வென்றார். இதேபோல், தொடரின் நாயகன் விருதை அபிஷேக் சர்மாவும், தொடரின் மிகவும் மதிப்புமிக்க வீரர் விருதை குல்தீப் யாதவும் வென்று அசத்தினர். மேலும், அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான விருதை அபிஷேக் சர்மாவும், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரருக்கான விருதை குல்தீப் யாதவும், அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரருக்கான விருதை மீண்டும் அபிஷேக் சர்மாவும் வென்றனர். விருது வென்றவர்களின் முழு பட்டியல் – ஆசிய கோப்பை 2025ஆட்ட நாயகன் (இறுதிப் போட்டி): திலக் வர்மாதிருப்புமுனையை ஏற்படுத்திய வீரர்  (இறுதிப் போட்டி): சிவம் துபேதொடரின் நாயகன்: அபிஷேக் சர்மாதொடரின் மிகவும் மதிப்புமிக்க வீரர்: குல்தீப் யாதவ்அதிக ரன்கள்: அபிஷேக் சர்மாஅதிக விக்கெட்டுகள்: குல்தீப் யாதவ்அதிக சிக்ஸர்கள்: அபிஷேக் சர்மாஇறுதிப் போட்டிக்குப் பிறகு, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பை மற்றும் பதக்கங்களை வாங்க இந்தியா மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version