இலங்கை

அமல் சில்வா கைது!

Published

on

அமல் சில்வா கைது!

மேல்மாகாண சபை முன்னாள் உறுப்பினரும்.ஸ்ரீலங்காபொதுஜன பெரமுனவின் தெஹிவளை கல்கிசை மாநகரசபையின் உறுப்பினருமான அமல் சில்வா, போலி ஆவணங்களைப் பயன்படுத்திப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஊழல் ஒழிப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊழல் ஒழிப்புப்பிரிவுப் பொலிஸரால் 2024 டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியும், மற்றும் கடந்த ஜனவரி முதலாம் திகதியும் 3 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான மிட்சுபிஸி ரக ஜீப் வாகனமொன்றும். சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான இரண்டு லேண்ட்ரோவர் ரக ஜீப் வாகனங்களுமே கைப்பற்றப்பட்டிருந்தன.

Advertisement

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய தற்போது அமல் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வாகனங்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அரசாங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களின் பதிவு எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளமை பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்றும், விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version