இலங்கை

இலங்கைப் பிரஜைகளின் வாழ்க்கைத்தரம் மேம்பாடு; ஜப்பானில் அநுர பெருமிதம்!

Published

on

இலங்கைப் பிரஜைகளின் வாழ்க்கைத்தரம் மேம்பாடு; ஜப்பானில் அநுர பெருமிதம்!

இலங்கை தொடர்ந்து சவால்களை எதிர்கொண்ட போதும், தற்போது பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்து வருகின்றது. அபிவிருத்தியின் பலன்கள் பரவலாகப் பகிரப்படுகின்றன. அனைத்துப் பிரஜைகளதும் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்படுகின்றது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஒசாகா நகரில் இடம்பெற்ற “எக்ஸ்போ 2025” கண்காட்சியில் பங்கேற்றார். நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Advertisement

அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகளவில் மாற்றங்கள் இடம்பெறும் தருணத்தில், இலங்கை பொருளாதாரப் பயணத்தில் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. ஜப்பான் இலங்கையின் நெருங்கிய நண்பன். பல கடினமான காலங்களில் ஆதரவளித்து பங்காளியாகவும் திகழ்கின்றது. இந்தக் கண்காட்சி ஊடாக இலங்கையின் பண்டைய கலாசாரப் பாரம்பரியம், இயற்கை அழகு, கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்கள், அத்துடன் தேயிலை, இரத்தினக் கற்கள் மற்றும் மசாலாப் பொருள்கள் போன்ற பிரபலமான தயாரிப்புகளை உலகுக்குக் காட்சிப்படுத்த எமக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது- என்றார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version