சினிமா
உயிரிழந்தோர் குடும்பங்களை விஜய் சந்திக்காததற்கு காரணம் என்ன? கேள்வியெழுப்பிய சனம் ஷெட்டி
உயிரிழந்தோர் குடும்பங்களை விஜய் சந்திக்காததற்கு காரணம் என்ன? கேள்வியெழுப்பிய சனம் ஷெட்டி
கரூரில் த.வெ.க. நடத்திய பரப்புரையின் போது ஏற்பட்ட நெரிசலில் பலர் பாதிக்கப்பட்டதோடு, சிலர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து நடிகை மற்றும் சமூக செயற்பாட்டாளர் சனம் ஷெட்டி தனது தீவிரமான வருத்தத்தையும், அதேசமயம், த.வெ.க. தலைவர் விஜய் இந்த விபத்து சம்பவத்திற்குப் பின்னரும் நேரில் வந்து பாதிக்கப்பட்டோரை சந்திக்காதது குறித்த தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள தனது பதிவில், சனம் ஷெட்டி, “கரூரில் நிகழ்ந்த இந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கக்கூடியது. தங்கள் பிள்ளைகளை, உறவினரை இழந்த குடும்பங்களின் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.” என கூறி, நிகழ்வின் தாக்கம் குறித்து தனது உணர்வுகளை பகிர்ந்துள்ளார்.இந்த சம்பவத்திற்கு பிறகு, நடிகர் விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்டோரை சந்திக்காதது குறித்து சனம் ஷெட்டி கேள்வியெழுப்பியிருந்தார். மேலும், த.வெ.க பரப்புரை திட்டத்தை மாற்றி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை வேண்டும் எனவும் கூறியுள்ளார் சனம் ஷெட்டி.