சினிமா

என்னை மாற்றியதே மனைவி தான்..! விஜய் ஆண்டனியின் உருக்கமான பதிவு வைரல்.!

Published

on

என்னை மாற்றியதே மனைவி தான்..! விஜய் ஆண்டனியின் உருக்கமான பதிவு வைரல்.!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கியவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, இன்று ஒரு அதிரடியான நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றிருக்கிறார்.தனது வாழ்க்கையில் நேர்த்தியான வெற்றியை நோக்கிச் சென்ற அந்த சாமான்ய இளைஞரின் பின்னணியில், ஒரு பெண்ணின் துணை, காதல், மற்றும் வழிகாட்டுதல் இருந்ததாக அவர் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் உருக்கமாக கூறியுள்ளார். அந்த பெண் வேறு யாரும் இல்லை, அவரது மனைவி தான்.சமீபத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியில், தனது வாழ்க்கையின் நெருக்கமான தருணங்களை பகிர்ந்த விஜய் ஆண்டனி, தன்னுடைய மனைவி பற்றி எளிமையான வார்த்தைகளால் கதைத்திருந்தார்.அதாவது, “என் மனைவி ரொம்ப அழகாக இருப்பாங்க… அவங்க சிட்டில வளர்ந்தவங்க… நான் கிராமத்தில் வளர்ந்தவன். எளிமையான வாழ்க்கை… சாதாரண செருப்பு தான் போடுவேன், ஜீன்ஸ் போட மாட்டேன். ஆனா அவங்க தான் என்னை வேற ஒரு நபராக மாற்றினாங்க.” என்று கூறியிருந்தார் விஜய் ஆண்டனி. அவர் கூறிய இந்த உரை, ரசிகர்களின் இதயங்களைத் தட்டி எழுப்பியது. ஏனெனில், ஒரு மனிதனின் மாற்றத்திற்கு பின்னால், ஒரு பெண்ணின் எப்படி இருந்தார் என்பதைப் புரிய வைத்தது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version