இலங்கை

ஐ.தே.க.தலைமை ஏற்பதற்குத் தயார்; நவீன் திஸாநாயக்க தெரிவிப்பு!

Published

on

ஐ.தே.க.தலைமை ஏற்பதற்குத் தயார்; நவீன் திஸாநாயக்க தெரிவிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் உட்பட கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த மனதுடன் தலைமைப் பதவியை எனக்கு வழங்கும் பட்சத்தில் அதனை ஏற்பதற்கு தயாராக இருக்கின்றேன் என்று முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைந்து பயணிப்பதற்குரிய பேச்சுகள் இடம்பெற்றுவருகின்றன. ஒன்றிணைப்பதற்குரிய முயற்சியிலேயே நான் ஈடுபட்டுவருகின்றேன். ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைந்து மாகாணசபைத் தேர்தலை எதிர்கொண்டால் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கும் தயார் அவ்வாறு போட்டியிட்டால் என்னால் வெற்றிபெற முடியும் – என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version