பொழுதுபோக்கு
ஓ.டி.டி-யில் அதிக விலைக்கு போன தமிழ் படம்… ரஜினி இருக்காரு, ஆனா முதல் இடம் அவருக்கு இல்ல: டாப் நடிகர் யார் தெரியுமா?
ஓ.டி.டி-யில் அதிக விலைக்கு போன தமிழ் படம்… ரஜினி இருக்காரு, ஆனா முதல் இடம் அவருக்கு இல்ல: டாப் நடிகர் யார் தெரியுமா?
கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு ஓ.டி.டி தளங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. என்னதான் திரையரங்குகளில் படங்கள் வெளியானாலும் ஓ.டி.டி-யில் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என பலர் இருக்கின்றனர்.இதனாலே பல படங்களில் ஓ.டி.டி-யில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அப்படி இந்த ஆண்டில் இதுவரை ஓடிடி தளத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட டாப் 5 தமிழ் படங்கள் குறித்து பார்க்கலாம். இந்த வரிசையில் 5-ஆம் இடத்தில் இருப்பது சூர்யா நடித்து வரும் அவரது 46-வது படம் தான். இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் சுமார் 90 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 4-வது இடத்தில் இருப்பது நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் தான். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் த்ரிஷா, சிம்ரன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தால் ரூ. 95 கோடிக்கு வாங்கப்பட்டது. சில காரணங்களால் தற்போது இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் 3-வது இடத்தில் இருப்பது நடிகர் கமல்ஹாசன் நடித்த ’தக் லைஃப்’ திரைப்படம் தான். இயக்குனர் மனிரத்னம் இயக்கத்தில் கமல்,சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் ரூ. 110 கோடி கொடுத்து வாங்கியது.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்த ’கூலி’ திரைப்படம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ரூ. 600 கோடி வரை வசூல் செய்த இப்படத்தை அமேசான் பிரைம் ஓ.டி.டி தளம் ரூ. 120 கோடி கொடுத்து வாங்கியது. இந்த பட்டியலில் டாப்பில் இருப்பதூ நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’ஜனநாயகன்’ திரைப்படம் தான். இப்படம் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தை அமேசான் பிரைம் ஓ.டி.டி தளம் ரூ. 125 கோடி கொடுத்து வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.