சினிமா

குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் இவர் தான்.. ஷோ முழுவதும் ஸ்கிரிப்ட் தானா?

Published

on

குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் இவர் தான்.. ஷோ முழுவதும் ஸ்கிரிப்ட் தானா?

ரசிகர்களின் மனம் கவர்ந்த விஜய் டிவி நிகழ்ச்சியாக உள்ளது குக் வித் கோமாளி. கடந்த இரண்டு சீசன்களில் பல மாற்றங்கள் நடந்த நிலையில், சற்று சரிவை சந்தித்தாலும் குரேஷி, புகழ், ராஜு ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு தனி கவனத்தை ஈர்த்துள்ளனர்.விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி 6ம் சீசன் தற்போது முடிவுக்கு வந்து இருக்கிறது. இதில் ராஜு டைட்டில் ஜெயித்து இருக்கிறார். அவருக்கு ரூ. 5 லட்சம் பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது.ரன்னர் அப் ஆக ஷபானா தேர்வாகி உள்ளார். ஷபானாவுக்கு ரூ. 2 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.இந்நிலையில், டைட்டில் ஜெயித்த பின் ராஜூ ‘குக் வித் கோமாளி ஷோ குறித்து பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், “இந்த நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் என அனைவரும் சொல்கிறார்கள். அது ஸ்கிரிப்ட் தான். யார் எங்கு சமைக்க வேண்டும், நடுவர் எங்கே அமர வேண்டும் உள்ளிட்டவை ஸ்கிரிப்ட் தான்.ஆனால் மற்ற விஷயங்கள் ஸ்கிரிப்ட் இல்லை என்பதை மட்டும் விமர்சிப்பவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.     

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version