சினிமா
குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு சம்பவம்!
குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு சம்பவம்!
சன் டிவியில் மிகவும் பாப்புலர் நிகழ்ச்சிகளில் ஒன்று எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியலில் திருமணம் பற்றிய பரபரப்பான காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.குணசேகரன் காலை 9 மணிக்கு நடக்கவிருந்த திருமணத்தை திடீரென திட்டமிட்டு அதிகாலை 4 மணிக்கே நடத்த ஏற்பாடு செய்து விட்டார்.இன்றைய எபிசோட் புரொமோவில், ஒரு பக்கம் சக்தி, நந்தினி, ரேணுகா 3 பேரும் தர்ஷனை அழைத்துக் கொண்டு வெளியே தப்பித்து செல்லும் போது குணசேகரன் மற்றும் அவரது குழுவினர் பார்த்துவிடுகின்றனர்.கோபத்தில் குணசேகரன் தர்ஷனை சரமாரியாக அடிக்கிறார். பின் சக்தியிடம் நீ உண்மையான ஆம்பளையா இருந்தா திருமணத்தை தடுத்துப்பார் என்று சவால் விடுகிறார்.மறுபக்கம், அடியாட்களிடம் இருந்து தப்பித்த ஜனனி மீண்டும் ஒரு பிரச்சனையில் சிக்கியது போல் தெரிகிறது. இதோ இன்றைய எபிசோட் பரபரப்பு புரொமோ,