இலங்கை
சட்டவிரோத செயற்பாட்டால் சிக்கிய பொலிஸ் அதிகாரி
சட்டவிரோத செயற்பாட்டால் சிக்கிய பொலிஸ் அதிகாரி
சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட பணி இடைநீக்கம் செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பண்டாரகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பண்டாரகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபரான பணி இடைநீக்கம் செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் களுத்துறை – பண்டாரகம பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு அருகில் வைத்து மோட்டார் சைக்கிளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் பண்டாரகம பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றி வந்த நிலையில் மதுபோதையில் கடமைக்கு சென்றதால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான பணி இடைநீக்கம் செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரிடமிருந்து 3750 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.