இலங்கை

தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம் ; சிதறிய நிலையில் மீட்கப்பட்ட தென்னிலங்கையரின் சடலம்

Published

on

தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம் ; சிதறிய நிலையில் மீட்கப்பட்ட தென்னிலங்கையரின் சடலம்

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்த நிலையில் நேற்று சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபர் நீர்கொழும்பைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண்  என தெரிய வந்துள்ளது.

Advertisement

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று காலை பயணித்த குறித்த ரயில் காலை சௌத் பார் ரயில் நிலையத்தில் தரித்து நின்று மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கி பயணித்துள்ளது.

இதன் போது சௌத்பார் -தள்ளாடி புகையிரத வீதி, இரட்டை கண் பாலத்திற்கு அருகில் ரயிலில்

மோதி உடல் பாகங்கள் சிதறிய நிலையில் குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டனர்.மீட்கப்பட்ட சடலம் மன்னார் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மன்னார் வைத்தியசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version