இலங்கை
தரமற்ற மருந்துகளால் ரூ.2,996.65 மில். இழப்பு
தரமற்ற மருந்துகளால் ரூ.2,996.65 மில். இழப்பு
மருத்துவ விநியோகப் பிரிவுக்கு தரமற்ற மற்றும் சேதமடைந்த மருந்துகளை வழங்கிய மருந்து விநியோகஸ்தர்களிடமிருந்து கடந்த மார்ச் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 2,996.65 மில்லியன் தொகை அறவிடப்பட வேண்டியுள்ளது என்று தேசிய கணக்காய்வில் தெரியவந்துள்ளது.
தரமற்ற மற்றும் சேதமடைந்த மருந்துகளுக்கான செலவுகள், அதற்கான நிர்வாகக் கட்டணங்கள் மற்றும் கையிருப்பில் உள்ள மருந்துகளை அழிப்பதற்கான செலவுகள் என்பவற்றுடன் சேர்த்து இந்தத்தொகை அறவிடவேண்டியுள்ளது என்று கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையை அறவிடுவது நிச்சயமற்றநிலையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அறவிடப்படாமல் உள்ள இந்தத் தொகையை மருந்து விநியோகஸ்தர்களிடமிருந்து மீளப்பெறுவதற்கு விரைவான மற்றும் பயனுள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்துக்கு கணக்காய்வு அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது.