பொழுதுபோக்கு
நான் வில்லனா? எத வச்சி கேக்குறீங்க? தனுஷ்க்கு ‘நோ’ சொன்ன தேவா!
நான் வில்லனா? எத வச்சி கேக்குறீங்க? தனுஷ்க்கு ‘நோ’ சொன்ன தேவா!
1986-ம் ஆண்டு வெளியான ‘மாட்டுக்கார மன்னாரு’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவா. தொடர்ந்து 1989-ம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான ’மனசுக்கேத்த மகராசா’ படத்தின் மூலம் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக வளர்ந்தார். அடுத்து தனது 3-வது படமாக ’வைகாசி பொறந்தாச்சு’ படத்திற்கு இசையமைத்தார். இந்த படத்தின் பாடல்கள் இன்றைக்கும் இளைஞர்களை துள்ளி விளையாட வைக்கும் அளவுக்கு பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த தேவாவை ‘தேனிசை தென்றல்’ என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.சென்னை மொழியில் பாடல்கள் எழுத தேவாவை தவிர வேறு யாராலும் முடியாது. சென்னை மொழி பாடல்களை மிகவும் அழகாக பாடக் கூடியவர் தேவா.ரஜினிக்கு அண்ணாமலை, பாட்ஷா, சரத்குமாருக்கு சூரியன், வேடன் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ள தேவா, இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் பாடகராகவும் முத்திரை பதித்துள்ளார். இவரது கானா பாடல்களுக்கு இன்றும் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் உண்டு. பல படங்களில் தேவா இசையமைப்பாளராகவே நடித்துள்ளார். இந்நிலையில், இசையமைப்பாளர் தேவா, தனுஷ் படத்தில் நடிக்க மறுத்தது குறித்து மனம் திறந்துள்ளார்.அவர் பேசியதாவது, ”தனுஷின் 50-வது படத்தில் வில்லனாக நடிக்க தனுஷ் என்னை அழைத்தார்.எதை வைத்து என்னை வில்லன் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தீர்கள் என்று தனுஷிடம் கேட்டேன். அவர் உங்களை விட சென்னை தமிழை யாராலும் நன்றாக பேச முடியாது என்று கூறினார். நான் இல்லை தனுஷ் நான் நடிக்கவில்லை. நான் ஆயிரம் முறை பாடிய பாடல்களையே என்னால் புத்தகம் இல்லாமல் பாட முடியாது.நீங்கள் சொல்லும் டையலாக் எல்லாம் என்னால் மனப்பாடம் செய்து சொல்ல முடியாது. 10 டேக் 15 டேக் வாங்கும் பொழுது வேறு படப்பிடிப்பிற்கு செல்லும் நபர்களுக்கு அது சிரமமாக இருக்கும்.பேசாமல் ஸ்டுடியோவில் அவர் இருந்திருப்பார். அவரை கொண்டு வந்து எத்தனை டேக் எடுக்கிறார் என்று யாராவது சொல்லுவார்கள். அதனால் வேண்டாம் நீங்கள் அழைத்ததற்கு நன்றி” என்றேன்.ஹிப்ஹாப் தமிழா நடித்த ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் தேவாவை வில்லனாக நடிக்க சொன்னபோது அவர் அந்த வாய்ப்பை மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.