சினிமா

‘பாட்டிலுக்கு 10 ரூபாய்..’ உயிர் போக போக விஜய் செய்த காரியம்? ரிலீஸான சர்ச்சை வீடியோ

Published

on

‘பாட்டிலுக்கு 10 ரூபாய்..’ உயிர் போக போக விஜய் செய்த காரியம்? ரிலீஸான சர்ச்சை வீடியோ

கரூரில் தவெக தலைவர்  விஜய் நடத்திய பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  இதற்கு பலர் தங்களுடைய கண்டனங்களையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.இந்த சம்பவத்தில் ஏற்கனவே 40 பேர் பலியாகினர். இன்று காலை  65 வயதுடைய பெண்ணொருவர் மேலும் பலியானதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.  தற்போது கிட்டத்தட்ட 34 மணித்தியாலத்திற்கு பின் வீட்டை விட்டு வெளியே வந்த விஜய், பட்டினப்பாக்கத்தில் உள்ள  தனது வீட்டிற்கு சென்றுள்ளார் என கூறப்படுகிறது.இதுவரையில் 41 பேர் உயிரிழந்த நிலையில் விஜயை கைது செய்ய வேண்டும் என நடிகை ஓவியா தெரிவித்து இருந்தார்.  இதற்கு பல எதிர்ப்புகள் வந்தன.  அத்துடன் பல அரசியல் தலைவர்களும் விஜயை கைது செய்ய வேண்டும் என கோரி வருகின்றனர். இந்த நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்து பல வீடியோக்கள்  வெளியாகி அதிர்ச்சியை கொடுத்து வருகின்றன.    ஏற்கனவே வெளியான வீடியோ ஒன்றில் விஜய்  தனது வாகனத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் அருகிலேயே இருந்த பலர் பேச்சு மூச்சு இல்லாமல் கீழே விழுந்து கிடந்தனர்.  அவர்கள் சம்பவ இடத்திலேயே  உயிர் இழந்திருக்கலாம் என்று  அங்கிருந்த  தொண்டர்கள் பேசிய காட்சிகள் பதிவாகி இருந்தன. தற்போது வெளியான வீடியோவில், நான்கைந்து பேர் ஒரு நபரை கைகளை பிடித்து தூக்கிச் செல்கின்றனர். அவர்கள் பின்னாடியே காவலர் ஒருவர் சிறுமி ஒருவரை தூக்கிக்கொண்டு ஓடுகின்றார். அதே நேரத்தில் விஜய்  தனது வாகனத்தில் இருந்து ‘பாட்டிலுக்கு பத்து ரூபாய்… பாட்டிலுக்கு பத்து ரூபாய்..’  என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கிண்டல் செய்து கொண்டுள்ளார்.  இது வீடியோவில் தெளிவாகி உள்ளது.இதேவேளை, சம்பவ இடத்தில் இருந்தவர்கள் பலரும் விஜய் பேசிக் கொண்டிருக்கும் போதே பல உயிர்கள் பறிபோய்விட்டன எனக் கூறினர். தற்போது அதை நிரூபிக்கும் வகையில்  வீடியோக்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version