இலங்கை

பாதாள குழுக்கள் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ஆதரவானோரை முற்றாக இல்லாதொழிப்பேன்! அனுர

Published

on

பாதாள குழுக்கள் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ஆதரவானோரை முற்றாக இல்லாதொழிப்பேன்! அனுர

பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்காக செயற்பட்ட அரச நிர்வாக கட்டமைப்பை முழுமையாக இல்லாதொழிப்பேன். 

பல உண்மைகள் வெளிவரும் போது அரசியல்வாதிகள் பலர் கலக்கமடைந்துள்ளார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

Advertisement

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஞாயிற்றுக்கிழமை (28) பிற்பகல் ஜப்பானில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரை டோக்கியோவில் சந்தித்து உரையாடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 ஜனாதிபதி அங்கு மேலும் குறிப்பிட்டதாவது,

சமூக கட்டமைப்பில் போதைப்பொருள் பாரியதொரு அழிவை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் யுவதிகளில் பெரும்பாலானோர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார்கள். 

Advertisement

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் பெரும்பாலானோர் போதைப்பொருள் மற்றும் அதனுடனான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புப்பட்டுள்ளார்கள்.

போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாதாள குழுக்கள் கறுப்பு இராச்சியமாகவே செயற்படுகிறது.புதுக்கடை நீதிமன்றத்துக்குள் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணையில் நீர்கொழும்பு பொலிஸாரும், மித்தெனிய துப்பாக்கிச்சூட்டுடன் தங்காலை பொலிஸாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிசை பொலிஸார் பாதாள குழுக்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளார்.

Advertisement

பாதாளக்குழுக்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்த இராணுவ அதிகாரிகள் தற்போது கைது செய்யப்பட்டு;ள்ளார்கள்.கடந்த காலங்களில் இராணுவ முகாம்களில் இருந்து டி56 துப்பாக்கிகள் வெளியில் சென்றுள்ளன.

பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்காக செயற்பட்ட அரச நிர்வாக கட்டமைப்பை முழுமையாக இல்லாதொழிப்பேன்.

 பாதாள குழு உறுப்பினர்களின் கைது மற்றும் அவர்கள் வெளிப்படுத்தும் விடயங்களினால் பல அரசியல்வாதிகள் தற்போது கலக்கமடைந்துள்ளார்கள். நாட்டு மக்கள் உன்னிப்பாக இவற்றை ஆராய வேண்டும். போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version