இலங்கை
பெண் தலைமைக் குடும்பங்கள் இலங்கையில் 1.2 மில்லியன்
பெண் தலைமைக் குடும்பங்கள் இலங்கையில் 1.2 மில்லியன்
இலங்கையில் 1.2 மில்லியன் குடும்பங்கள் பெண்களால் தலைமை தாங்கப்படுவதாக களனிப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனோஷா எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதிகரித்துவரும் விவாகரத்து விகிதம் காரணமாக பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பெண்களைப் பொருளாதார ரீதியாக அதிகாரம் அளிப்பதன் அவசரத் தேவை எழுந்துள்ளது. அவர்களின் நிதி ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவது அவர்களின் குடும்பங்கள் மற்றும் பரந்த சமூகத்தின் நல்வாழ்வுக்கு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.