இலங்கை

பொருளாதார முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல் ; ஹரிணி மற்றும் IMF பிரதிநிதி சந்திப்பு

Published

on

பொருளாதார முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல் ; ஹரிணி மற்றும் IMF பிரதிநிதி சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Evan Papageorgiou, இன்று (29) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்.

அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் மறுசீரமைப்பு திட்டத்தின் முன்னேற்றத்தை, குறிப்பாக நிர்வாகத்தை வலுப்படுத்தவும் ஊழலைக் குறைக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அவர் பாராட்டினார்.

Advertisement

வரிக் கொள்கை சீர்திருத்தங்களின் முக்கியத்துவம் மற்றும் வரி விலக்குகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் கவனம் செலுத்தியுள்ளார்.

2026 நாட்டின் வரவு செலவு திட்டத்தில் சமூகப் பாதுகாப்பு கட்டமைப்புக்கான வளங்களை ஒதுக்கீடு செய்தமையையும் அவர் பாராட்டினார்.

2026 வரவு செலவு திட்டத்தில் மக்களை அதிகாரம் அளிக்க நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

Advertisement

பொருளாதார முன்னேற்றம் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்றும், தரமான முதலீடுகளை ஈர்ப்பது அரசாங்கத்திற்கு முன்னுரிமை என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதும் அவசியம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version