இலங்கை
போதைப்பொருளுடன் கைதான இளைஞன் ; சோதனையில் மீட்கப்பட்ட ஆபத்தான பொருட்கள்
போதைப்பொருளுடன் கைதான இளைஞன் ; சோதனையில் மீட்கப்பட்ட ஆபத்தான பொருட்கள்
கொட்டாவ – ருக்மலே வீதிப் பகுதியில் 75.4 கிராம் ஹெரோயின், 458 தோட்டாக்கள், 30 போலி வாகன இலக்கத் தகடுகள் மற்றும் 2 தொலைபேசிகள் உள்ளிட்ட பலவற்றுடன் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸ் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.