இலங்கை

மட்டுவிலிலுள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளை மீண்டும் ஆரம்பம்!

Published

on

மட்டுவிலிலுள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளை மீண்டும் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளை செவ்வாய்க்கிழமை மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் பொருளாதார மத்திய நிலையக் கடை உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் மாவட்டச் செயலர் ம.பிரதீபன் தலைமையில் கடந்த வியாழக்கிழமை யாழ். மாவட்டச் செயலர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது யாழ்.மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன் கருத்துத் தெரிவிக்கையில், பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் குறித்தும், அதன் இடஅமைவு தொடர்பாகவும் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன். சமூகத்துக்குப் பயனுள்ள வகையில் குறித்த நிலையத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்-என்றார். கலந்துரையாடலில்
யாழ். மாவட்ட மேலதிக செயலர் கை.சிவகரன், யாழ். மாவட்ட விவசாயப் பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்டப் பிரதம பொறியியலாளர், சாவகச்சேரிப் பொருளாதார மத்திய நிலைய பிரதேசசெயலாளர், கணக்காளர், முகாமையாளர், வர்த்தகப் பிரதி நிதிகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளைக் குத்தகைக்கு எடுத்த குத்தகைக்காரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version