சினிமா

மனம் பதறுகிறது.. விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து லதா ரஜினிகாந்த்!

Published

on

மனம் பதறுகிறது.. விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து லதா ரஜினிகாந்த்!

விஜய் தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தொடர்ந்து ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி, கடைசியாக கரூரில் பிரச்சாரம் செய்தார்.அந்த பிரச்சாரத்தில் கலந்து கொண்ட தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள், பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் என மொத்தம் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இந்த செய்தி மொத்த தமிழநாட்டையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இது தொடர்பாக பல சினிமா மற்றும் அரசியல் வாதிகள் பல கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தற்போது இந்த பிரச்சனை தொடர்பாக லதா ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், ” ஜனங்களே, பொதுமக்களே, என் அன்பான தமிழ் மக்களே, எங்கு கூட்டம் சேர்ந்தாலும் பாதுகாப்பை மட்டும் விட்டுவிடாதீர்கள். குழந்தைகள், பெண்களால் கடைசி நிமிடத்தில் ஓட முடியாது.நாம் தொலைத்த குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள்? அதை நினைக்கும் போது தான் மனம் பதறுகிறது. இனியும் இப்படியொரு துயரம் நடக்காமல் இருக்க அரசு, பொதுமக்கள், காவல்துறை, நிகழ்ச்சி நடத்துவோர் என அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.       

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version