இலங்கை
மஹிந்தவின் வீடு சென்று நன்றி பாராட்டிய ரணில்!
மஹிந்தவின் வீடு சென்று நன்றி பாராட்டிய ரணில்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்துக்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நேற்றுச் சந்தித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு செல்லும் வழியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது என்று ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, தான் சிறையில் இருந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ச ஆற்றிய பங்களிப்புக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவின் உடல் நலம் மற்றும் நல்வாழ்வு தொடர்பாக விசாரித்தார் என்று ஐக்கிய தேசியக் கட்சி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.