இந்தியா

முதியோர் பென்ஷனை உயர்த்தி வழங்காத காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது – சபாநாயகர் செல்வம்

Published

on

முதியோர் பென்ஷனை உயர்த்தி வழங்காத காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது – சபாநாயகர் செல்வம்

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஐந்து ரூபாய் கூட முதியோர் பென்ஷனை உயர்த்தி வழங்காத காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று சபாநாயகர் செல்வம் பேசினார்.புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் முதியோர், விதவைப் பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு மாதாந்திர நிதி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மணவெளி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 300 நபர்களுக்கு மாதாந்திர நிதி உதவிக்கான அரசாணைகளை வழங்கும் நிகழ்வு தவளக்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சபாநாயகரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்வம் மாதாந்திர நிதி உதவிக்கான அரசாணையை வழங்கினார்.நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் செல்வம், “தேசிய ஜனநாயக கூட்டணியில் அரசு பணியில் 5000 பேர்களுக்கு நேர்மையான முறையில் அரசு வேலை கிடைத்துள்ளது. இதையெல்லாம் மனதில் வைத்து வருகின்ற தேர்தலில் யார் வெற்றி பெற்றால் நமக்கு நல்லது செய்வார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள். தேர்தல் நேரத்தில் நாங்கள் அதை செய்வோம், இதை செய்வோம் என்று வாக்கு சேகரிக்க வருவார்கள். அவர்களுக்கு தக்க பாடம் புகுத்த வேண்டும்.மேலும் 2016 முதல் 2020 வரை ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி பொங்கல் பரிசாக 72 ரூபாய் அறிவித்து அதையும் ஒழுங்காக தரவில்லை. அதேபோல் முதியோர் பென்ஷன் ஐந்து ரூபாய் கூட உயர்த்தி தரவில்லை, பொதுமக்கள் தவறான முடிவு எடுத்ததால் கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த திட்டமும் பொதுமக்களுக்கு நடைபெறவில்லை. அதே நிலை மீண்டும் வரும், எனவே மக்கள் சிந்திக்க வேண்டும் என சட்டப்பேரவை தலைவர் சபாநாயகர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் முத்துமீனா இணை இயக்குனர் பாலமுருகன் மற்றும் மணவெளி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version