இலங்கை

யாழில் வயலுக்கு வரம்பு கட்டச் சென்ற குடும்பஸ்தருக்கு நடந்த விபரீதம்

Published

on

யாழில் வயலுக்கு வரம்பு கட்டச் சென்ற குடும்பஸ்தருக்கு நடந்த விபரீதம்

யாழில் நேற்று (27) வயலுக்கு வரம்பு கட்டச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கண்டி வீதி, அரியாலை பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் அரியாலை – நாவலடி பகுதியில் விவசாயம் செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று (27) காலை வரம்பு கட்டுவதற்காக அங்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று இரவு வரை அவர் திரும்பி வராத நிலையில் உறவினர்கள் அவரைத் தேடிச்சென்றனர்.

Advertisement

இதன்போது அவர் அங்குள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகில் உள்ள வெளி ஒன்றில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version