இந்தியா
விஜய் ரோட் ஷோவிற்கு அனுமதி வழங்க கூடாது; புதுச்சேரி ஆளுநரிடம் மனு
விஜய் ரோட் ஷோவிற்கு அனுமதி வழங்க கூடாது; புதுச்சேரி ஆளுநரிடம் மனு
புதுச்சேரியில் 11 ஆம் தேதி நடைபெற உள்ள த.வெ.க தலைவர் விஜய் ரோட் ஷோவிற்கு அனுமதி வழங்கக் கூடாது என துணைநிலை ஆளுநரிடம் சமூக ஆர்வலர் மனு அளித்துள்ளார்.புதுச்சேரியில் வரும் 11 ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் சார்பில் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த மாநில நிர்வாகிகள் முதலமைச்சர் மற்றும் காவல்துறையிடம் அனுமதி வழங்க மனு அளித்து இருந்தனர்.இதனிடையே நேற்று முன்தினம் கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்த நிலையில் புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடிகர் விஜய் நடத்த உள்ள ரோட் ஷோவிற்கு அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தி சமூக ஆர்வலர் அசோக் ராஜா என்பவர் துணைநிலை ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளார்.மேலும் வார இறுதி நாள் என்பதால் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் இருப்பார்கள் என்பதாலும், குறுகிய சந்திப்பில் பிரச்சாரம் செய்ய அரசு அனுமதி அளிக்காமல் ஹெலிபேட் மைதானம் அல்லது துறைமுக வளாகத்தில் விஜய்க்கு அனுமதி அளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.பாபு ராஜேந்திரன் புதுச்சேரி