இலங்கை
வீதியின் குறுக்கே நின்றால் அகற்றத்தான் செய்வார்களாம்; மன்னார் தாக்குதல் சம்பவத்துக்கு ஜெகதீஸ்வரன் எம்.பி. விளக்கம்!
வீதியின் குறுக்கே நின்றால் அகற்றத்தான் செய்வார்களாம்; மன்னார் தாக்குதல் சம்பவத்துக்கு ஜெகதீஸ்வரன் எம்.பி. விளக்கம்!
வீதியின் குறுக்கே நின்றால் பொலிஸார் வெளியேற்றத் தான் செய்வார்கள் என்று மன்னாரில் பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு விளக்கம் கொடுத்துள்ளார் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன்.
வவுனியாவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், அதன்பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார். மன்னார் காற்றாலை விடயம் தொடர்பாகக் கேள்வி எழுப்பியபோது, மன்னார் காற்றாலை விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டுள்ளார், அந்த விடயம் தொடர்பில் கருத்துக்கூற விரும்பவில்லை என்று பதிலளித்துள்ளார்.
மன்னார் காற்றாலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பங்குத்தந்தைகள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கேள்வி எழுப்பியபோது, வீதியின் குறுக்காக நின்றால் பொலிஸ் வெளியே போகுமாறுதானே சொல்வார்கள். அதன் யதார்த்தம் எமக்கு விளங்குகின்றது. ஆயினும் அந்த விடயம் தொடர்பாகக் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.