இலங்கை
ஹட்டன் – நுவரெலியா கல்வி வலயத்தில 3280 பாடசாலை மாணவர்களுக்கு அத்தியவாசிய பொருட்கள் வழங்கி வைப்பு!
ஹட்டன் – நுவரெலியா கல்வி வலயத்தில 3280 பாடசாலை மாணவர்களுக்கு அத்தியவாசிய பொருட்கள் வழங்கி வைப்பு!
மாணவர்களுக்கு அத்தியவாசிய பொருட்கள் வழங்கி வைப்பு!
பெரென்டினா அபிவிருத்தி சேவைகள், வின்சென்ட் பெர்ரர் அறக்கட்டளை உடன் இணைந்து ‘பெருந்தோட்ட சமூக செயல் திட்டம்’ எனும் தொனிப்பொருளில் பல சேவைகளை மலையகத்தில் ஆரம்பிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை காசல்ற்ரி, கார்ஃபாக்ஸ் கல்லூரியில் இடம்பெற்றது.
இவ் வேலைத்திட்டத்தில் ஒரு பகுதியாக, கடந்த சனிக்கிழமை காசல்ற்ரி, கார்ஃபாக்ஸ் கல்லூரியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்ச்சியில், ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 25 பாடசாலைகளின் 3,280 மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகள், தைக்கப்பட்ட உள்ளாடைகள் மற்றும் அப்பியாச புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி, பெரெண்டினா மேம்பாட்டு சேவைகளின் தலைவர் மற்றும் BMIC இன் நிர்வாக இயக்குநர் அனுர அத்தபத்து, நோர்வூட் உதவி மாவட்டச் செயலாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் – அட்டன் வலயம், ஹட்டன் வலயக் கல்வி பிரதிப் பணிப்பாளர், மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி, நோர்வுட், வனராஜா மற்றும் ஆஸ்போர்ன் தோட்டங்களின் பிளான்டேஷன் மேலாளர்கள், BMIC கிளை மேலாளர் மற்றும் துணை மேலாளர், 25 பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் காசல்ற்ரி, கார்ஃபாக்ஸ் கல்லூரி பாடசாலை மாணவ, மாணவிகளின் கலை நிகழ்வுகளுடம் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை