சினிமா

CWC புகழ் பெண்களை தொட்டு தொட்டு பேசுகிறார்.. விமர்சனங்களுக்கு மனைவி பதிலடி!

Published

on

CWC புகழ் பெண்களை தொட்டு தொட்டு பேசுகிறார்.. விமர்சனங்களுக்கு மனைவி பதிலடி!

ரசிகர்களின் மனம் கவர்ந்த விஜய் டிவி நிகழ்ச்சியாக உள்ளது குக் வித் கோமாளி. கடந்த இரண்டு சீசன்களில் பல மாற்றங்கள் நடந்த நிலையில், இந்த நிகழ்ச்சியை மிகவும் விறுவிறுப்பாக வைத்திருந்தது குரேஷி, புகழ், ராஜு ஆகியோர் தான்.சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி 6ம் சீசன் தற்போது முடிவுக்கு வந்து இருக்கிறது. இதில் ராஜு டைட்டில் ஜெயித்து இருக்கிறார். அவருக்கு ரூ. 5 லட்சம் பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது. ரன்னர் அப் ஆக ஷபானா தேர்வாகி உள்ளார்.ஷபானாவுக்கு ரூ. 2 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல சீசன்களாக கோமாளியாக வலம் வருபவர் புகழ். இவர் எப்போதும் பெண்களை தொட்டு தொட்டு பேசுகிறார் என்று பலர் கமெண்ட் அடிப்பது உண்டு.மனைவி பதிலடி! இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு அவரது மனைவி பதிலடி கொடுத்து பேசியுள்ளார்.அதில், ” எனது கணவர் புகழ் பெண்களை தொட்டு தொட்டு பேசுகிறார் என்ற குற்றச்சாட்டு தான் அதிகம் வருகிறது. ஷோவை ஷோவாக பார்க்க வேண்டும், இதில் பிரச்சனை என்பது யாருக்கு என்றால் எனக்கும் அந்த பெண்ணுக்கும் தான்.என் கணவர் பற்றி எனக்கு தெரியும், தவறான நோக்கத்துடன் பழகும் எந்த ஒரு அணிடமும் ஒரு பெண் பழக மாட்டாள்.அப்படி இருக்கும் போது முதல் சீசன் முதல் இப்போது வரை அனைத்து பெண்களும் இவருடன் நட்பாக உள்ளார்கள், இதை வைத்து பார்த்தால் ஒரு ஆணின் குணம் எப்படி உள்ளது என்பதை பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version