இந்தியா

H-1B விசா பிரச்சனை: சாப்ட்வேர் இன்ஜினியர் முதல் ப்ராடக்ட் மேனேஜர் வரை… சம்பளத்தை வெளியிட்ட மைக்ரோசாப்ட்

Published

on

H-1B விசா பிரச்சனை: சாப்ட்வேர் இன்ஜினியர் முதல் ப்ராடக்ட் மேனேஜர் வரை… சம்பளத்தை வெளியிட்ட மைக்ரோசாப்ட்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் சமீபத்தில் தனது விசா முறையில் முக்கிய மாற்றத்தை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, H-1பி விசாக்களுக்கு $100,000 (சுமார் ரூ.83 லட்சம்) கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு, குறிப்பாகத் தொழில்நுட்ப நிறுவனங்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதைக் கடினமாக்கும். அமெரிக்க வேலைகளைப் பாதுகாப்பதே இந்தக் கொள்கை மாற்றத்தின் நோக்கமாகும்.இருந்தாலும், இது இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த பல திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களைப் பாதிக்கும்.  இந்த மாற்றங்கள், அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கையைத் தவணை அடிப்படையில் கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த H-1பி விசா முறையால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் வெளியாகியுள்ளது.மென்பொறியாளர்கள் சம்பளம்மென்பொறியாளர் (ரெட்மண்ட்) –  $284,000மென்பொறியாளர் (மவுண்டண்ட் வியூ) – $187,000 – $210,000மென்பொறியாளர் (நியூயார்க் )  –  $162,000 – $185,000சீனியர் மென்பொறியாளர் ( ரெட்மண்ட்) –  $162,500 – $240,000முதன்மை மென்பொறியாளர் (ரெட்மண்ட்)  $214,000 – $275,000தரவு அறிவியல் (Data scientist) சம்பளம்தரவு அறிவியல் II, (ரெட்மண்ட்) – $121,200 – $160,000தரவு அறிவியல் (மவுண்ட் வியூ) –  $274,500புராடக்ட் மேனேஜர் சம்பளம்புராடக்ட் மேனேஜர் II (ரெட்மண்ட்) –  $122,800 – $167,000முதன்மை புராடக்ட் மேனேஜர்  (ரெட்மண்ட்) –  $250,000மற்றவைமென்பொறியாளர் மேனேஜர் (ரெட்மண்ட்) – $182,000 – $205,000சந்தை ஆராய்ச்சி ஆய்வாளர் (ரெட்மண்ட்) – $135,000கண்டண்ட் ஆர்கிடெக்ட் (ரெட்மண்ட்) – $114,000சாப்ட்வேர் டெவலப்மெண்ட் மேனேஜர் (ரெட்மண்ட்) – $195,000 – $205,000முதன்மை கண்டண்ட் டிசைனர் (சான் பிரான்சிஸ்கோ) –  $168,000பிசினஸ் புரொகிராம் மேனேஜர் (ரெட்மண்ட்) – $120,000 – $144,000அக்கவுண்ட் எக்சிகியூட்டிவ் (பெல்லூவ்) –  $155,000ஒவ்வொரு நகரத்தில் இருப்பவர்களும் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்பது இதன் மூலம் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version