இலங்கை

அதிக விலையில் அரிசி; 105 கடைகளில் சோதனை!

Published

on

அதிக விலையில் அரிசி; 105 கடைகளில் சோதனை!

கடந்த இரண்டு வாரங்களில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனைசெய்த 105 வர்த்தக நிலையங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும், அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தக நிலையங்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தனியான வர்த்தகர் அதிக விலைக்கு அரிசி விற்று. அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஒரு இலட்சம் ரூபா முதல் 5 இலட்சம் ரூபாவரை அபராதம் அல்லது 5 மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று அதிகாரசபை எச்சரித்துள்ளது. ஒரு தனியார் நிறுவனம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் 5 இலட்சம் ரூபா முதல் 50 இலட்சம் ரூபா வரை அபராதம் விதிக்கலாம். அபராதம் அல்லது சிறைத் தண்டனை அல்லது மேற்கூறிய இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version