இலங்கை
அநுர அரசு வாய் திறந்தால் பொய் மழை
அநுர அரசு வாய் திறந்தால் பொய் மழை
அநுரவின் அரசாங்கம் 24 மணி நேரமும் பொய்களைப் பரப்புகின்றது. பொய்களையே கொள்கையாகக் கொண்டிருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விமர்சித்துள்ளார்.
அண்மைக்காலமாக போதைப்பொருள்கள் பெருமளவில் கைப்பற்றப்படுகின்றன. இது தொடர்பில் அரசால் பல்வேறு பரப்புரைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. போதைப்பொருள் காரணமாக நாடும் சீரழிந்து வருகிறது. அவற்றைக் கண்டுபிடித்து அழிப்பது சிறந்த செயலாகும். ஆனால் துறைமுகத்தில் இருந்து அனுமதியில்லாமல் கொள்கலன்களை விடுவித்த விவகாரம் தொடர்பில் அரசு மெளனமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.