தொழில்நுட்பம்
ஆரஞ்சு நிறத்தில் ஜொலிக்கும் இந்த ஆண்டின் முதல் ‘சூப்பர் மூன்’.. இந்தியாவில் எப்போது பார்க்கலாம்?
ஆரஞ்சு நிறத்தில் ஜொலிக்கும் இந்த ஆண்டின் முதல் ‘சூப்பர் மூன்’.. இந்தியாவில் எப்போது பார்க்கலாம்?
இந்த ஆண்டின் முதல் சூப்பர் மூன் (Supermoon) எனப்படும் நிகழ்வு அக்டோபர் மாதம் இரவு வானில் தோன்றத் தயாராக உள்ளது. இந்த ஆண்டின் தொடர்ச்சியான 3 சூப்பர் முழு நிலவுகளில் முதலாவது, ‘ஹார்வெஸ்ட் மூன்’ (Harvest Moon) ஆகும். இது அக்டோபர் 6ஆம் தேதி உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இலையுதிர் காலச் சம இரவு நிகழ்ந்து 2 வாரங்களுக்குப் பிறகு இந்த ‘சூப்பர் மூன்’ வரும் என்று நம்பப்படுகிறது. அக்டோபர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் இது சில இரவுகளுக்கு மிக பிரகாசமான நிலவொளியை வழங்க வாய்ப்புள்ளது. இலையுதிர் காலச் சம இரவு என்பது, சூரியன் சரியாக பூமியின் நிலநடுக்கோட்டிற்கு மேலே இருக்கும் தருணம் ஆகும்; அப்போது பகலும் இரவும் சம நீளத்தில் இருக்கும். வானத்தைப் பார்க்க ஆர்வமுள்ளவர்கள், முழு நிலவின் தெளிவான காட்சியைப் பெற மேகமூட்டமின்றி இருக்கும்படி பார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். நிலவு அடிவானத்தில் வழக்கத்தை விடப் பெரிதாகவும் தாழ்வாகவும் தெரியும்.ஹார்வெஸ்ட் மூன் என்றால் என்ன?எளிமையாகச் சொன்னால், ஹார்வெஸ்ட் மூன் என்பது வட கோளப்பகுதியில் இலையுதிர்காலம் தொடங்குவதற்கு அருகில் வரும் பௌர்ணமி ஆகும். இந்தியாவில் நாம் இதனை இலையுதிர் காலம் என்று குறிப்பிடாவிட்டாலும், இது செப்டம்பர் இறுதி முதல் நவம்பர் வரையிலான கால கட்டத்துடன் ஒத்துப்போகிறது. இந்த காலகட்டத்தில், முழு நிலவு வழக்கத்தை விடச் சற்று முன்னதாகவே அடிவானத்தில் எழுகிறது, இது சில இரவுகளுக்குத் தொடர்ச்சியாக நிகழ்கிறது. இதனால் மாலை நேரங்களில் வானம் நீண்ட நேரம் பிரகாசமாக இருக்கும். அடிவானத்தில் தாழ்வாக தெரிவதால், பூமியின் வளிமண்டலம் வழியாக நாம் அதைப் பார்க்கும்போது, சூர்ய உதயத்தின்போது அல்லது சூர்ய அஸ்தமனத்தின்போது தோன்றுவது போலவே, நிலவு ஒரு பெரிய தங்க ஆரஞ்சு (Golden Orange) நிறத்தில் காட்சியளிக்கும்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கமின்சாரம் இல்லாத காலங்களில், சூரியன் மறைந்த பின் தங்கள் விவசாய வேலைகளைத் தொடர விவசாயிகள் நிலவொளியை நம்பியிருந்தனர். வருடத்தின் இந்தக் காலகட்டத்தில், குளிர்காலம் தொடங்குவதற்கு முன் காய்கறிகள், தானியங்கள் மற்றும் பழங்களை அறுவடை செய்ய விவசாயிகளுக்கு அதிக நேரம் தேவைப்பட்டது. இந்த ஹார்வெஸ்ட் மூன் அவர்களுக்கு தேவையான கூடுதல் வெளிச்சத்தைக் கொடுத்தது. இன்று நாம் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிவிட்டாலும், இந்த நிகழ்வு வானியல் ஆர்வலர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில் பார்க்க முடியுமா?ஆம், நீங்க இந்தியாவில் ஹார்வெஸ்ட் மூனைக் காண முடியும். அக்.6 மற்றும் 7 ஆம் தேதிகளில் மாலை மற்றும் இரவு முழுவதும் இந்த சூப்பர் மூனைக் காணலாம்.நிலவு உதயமாகும் நேரத்தில் மிக ஆரஞ்சு நிறத்துடனும், பெரிதாகவும் தோன்றும் என்பதால், உயரமான கட்டிடங்கள் அல்லது மரங்கள் இல்லாத ஒரு இடத்தைக் கண்டறியவும். பூங்காக்கள், மொட்டை மாடிகள் அல்லது நகரத்தின் வெளிச்சங்களில் இருந்து விலகி இருக்கும் திறந்தவெளிகள் மிகத் தெளிவான காட்சியை அளிக்கும். நிலவு உதயமாகும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே நீங்கள் பார்க்க விரும்பும் இடத்தில் இருக்கத் திட்டமிடுங்கள்.வானிலை மிக முக்கியம் என்பதால், மேகமூட்டம் இருக்கிறதா என்று உள்ளூர் வானிலைச் செயலியில் சரிபார்க்கவும். பைனாகுலர் அல்லது சிறிய தொலைநோக்கி மூலம் நிலவின் மேற்பரப்பு விவரங்களை (கிரேட்டர்கள்) பார்க்கலாம். புகைப்படம் எடுக்க டிரைபாட் (Tripod) கொண்ட கேமராவையோ அல்லது நைட் மோடு (Night Mode) கொண்ட ஸ்மார்ட்போனையோ பயன்படுத்தலாம்.