இலங்கை
ஆற்றில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணை பொலிஸார்
ஆற்றில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணை பொலிஸார்
மட்டக்களப்பில் ஆற்றில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாசிக்குடா வீதியில் உள்ள வாழைச்சேனை ஆற்றில் இன்று சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிய வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.