இலங்கை
இந்தியா – இலங்கையிடையே வலுசக்தி ஒத்துழைப்பு முயற்சி; துறைசார் அமைச்சர்கள் பேச்சு!
இந்தியா – இலங்கையிடையே வலுசக்தி ஒத்துழைப்பு முயற்சி; துறைசார் அமைச்சர்கள் பேச்சு!
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் வலுசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி, தற்போது இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் பிரதான அம்சமாக அவர், இந்திய வலுசக்தித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். இதன்போதே, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுசக்தி ஒத்துழைப்புத் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக, இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை ஊக்கப்படுத்தும் வகையிலான செயற்றிட்டங்கள் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் இலங்கை ஊழியர்களுக்கான பயிற்சி வாய்ப்புகளை இந்தியாவில் வைத்து வழங்குதல் தொடர்பிலும் ஆராயப்பட்டதாகத் தெரியவருகின்றது.