இலங்கை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவி விலக வேண்டும்: பொதுஜன பெரமுன

Published

on

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவி விலக வேண்டும்: பொதுஜன பெரமுன

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மக்கள் விடுதலை முன்னணியின் சட்ட பிரிவில் உறுப்பினராக பதவி வகித்ததாக அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆணைக்குழுவின் சுயாதீனத்தை கருத்திற்கொண்டு பணிப்பாளர் நாயகம் உடன் பதவி விலக வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Advertisement

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சட்டவாட்சியை மேற்கொள்வதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் எதிர்க்கட்சியினரை இலக்குப்படுத்தியுள்ளது. பொலிஸ் திணைக்களம் முறையற்றதாக செயற்படுகிறது.மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் அரசியல் செயற்பாட்டாளராக இருந்த சானி அபேசேகர குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சார மேடைகளில் உரையாற்றிய ரவி செனவிரத்ன பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

பொலிஸார் தற்போது அரசியல் நோக்கத்துடன் செயற்படுகின்றனர்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மக்கள் விடுதலை முன்னணியின் சட்ட பிரிவில் உறுப்பினராக பதவி வகித்ததாக அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர் நந்தன குணதிலக குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுயாதீன இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் சுயாதீனத்தை கருத்திற் கொண்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க பதவி விலக வேண்டும்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version