இலங்கை

எதிர்க்கட்சிகளின் கூச்சலால் அரசாங்கம் அச்சமடையாது; சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Published

on

எதிர்க்கட்சிகளின் கூச்சலால் அரசாங்கம் அச்சமடையாது; சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களின் சொத்து விவரங்கள் எம்மால் சமர்ப்பிக்கப்பட்டவையாகும். இதற்கு எம்மால் பொறுப்பு கூறமுடியும். எனவே எதிர்க்கட்சிகளின் கூச்சல்களால் நாம் அச்சமடையப் போவதில்லை என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
எமது சொத்து விபரங்களை இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் நாமாக முன்வைத்து சமர்ப்பித்துள்ளோம். எமது சொத்துகள் தொடர்பில் எவருக்கேனும் சந்தேகம் இருந்தால், அது குறித்து முறைப்பாடளித்தால். அதற்குப் பதிலளிப்பதற்கு எந்தச்சந்தர்ப்பத்திலும் நாம் தயாராகவே இருக்கின்றோம். சட்ட விரோதமாக சொத்துகளைச் சேகரித்துள்ளவர்களுக்கே இது சவாலாகியுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலுள்ளவர்கள் தமது உண்மையான சொத்து விபரங்களை முன்வைத்துள்ளமையால், கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்களும் தமது உண்மையான சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பொய்யான – தகவல்களைச் சமர்ப்பித்தால். அதனை மக்கள் இலகுவாக அறிந்துகொள்வார்கள்-என்றார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version