பொழுதுபோக்கு

என்ன பயமா இருக்கா? அப்பன நல்ல திட்டுற… நாசரிடம் நேரடியாக சொன்ன சிவாஜி: தேவர் மகன்

Published

on

என்ன பயமா இருக்கா? அப்பன நல்ல திட்டுற… நாசரிடம் நேரடியாக சொன்ன சிவாஜி: தேவர் மகன்

தமிழ் திரையுலகில் பல தசாப்தங்களாக தனது நடிப்புக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்று பெயர் எடுத்தவர் நாசர். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் நடிகர் நாசர் தனது நடிப்பு திறமையால் சினிமா துறையில் மிகப்பெரிய அடையாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நாசர், இயக்குநர் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘கல்யாண அகதிகள்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து, ‘நாயகன்’, ‘தேவர் மகன்’, ‘குணா’, ‘குருதிப்புனல்’, ’அவ்வை சண்முகி’, ‘படையப்பா’, ‘காதலர் தினம்’ ‘ஜீன்ஸ்’ என 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நாசருக்கு ‘தேவர் மகன்’, ‘குறுதிப்புனல்’ போன்ற படங்கள் பெரும் வரவேற்பை பெற்று தந்தன.எந்த கதாபாத்திரமானாலும் அதனுடன் ஒன்றி அந்த பாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் வல்லமை படைத்தவர் நடிகர் நாசர். ‘பாகுபலி’ திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் பான் இந்தியா அளவில் பிரபலமானார். நடிகர் நாசர் ரஜினி, கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ளார்.இந்நிலையில், நடிகர் நாசர் ‘தேவர்மகன்’ திரைப்படத்தில் சிவாஜி உடன் நடித்தது குறித்து மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, ”அங்க இருந்து வந்து என் தோல் மேல் கைய போட்டாரு. என்ன பாய்  பயமாக இருக்கா? அப்ப நல்ல திட்டு. யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம். நல்ல திட்டு. மனசார திட்டு என்றார். நான் எதனால் திணறுகிறேன் என்பது சிவாஜி சாருக்கு தெரியும். அவரு குடுத்த எனர்ஜியுடன் நான் திட்டி தீர்த்தேன். ‘தேவர்மகன்’ படத்தில் அந்த காட்சி தான் இன்றும் பேசப்படுகிறது” என்றார்.‘தேவர்மகன்’ திரைப்படத்தில் நடிகர் நாசரின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. என்னயா இவருக்கு இப்படி நடிக்காரு என்று ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு அவரது நடிப்பு இருந்தது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version