இலங்கை

ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க 7 நிமிடம்

Published

on

ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க 7 நிமிடம்

  நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் 08 நிமிடங்களுக்குள் ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இலகுரக வாகன உரிமங்களை ஒவ்வொரு 08 வருடங்களுக்கும், கனரக வாகன உரிமங்களை ஒவ்வொரு 04 வருடங்களுக்கும் புதுப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் ரத்நாயக்க கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

Advertisement

“உரிமங்களைப் புதுப்பிக்க விரும்புவோர் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது, ஆனால் அந்த நிறுவனத்திடம் கைரேகை முறை இல்லை, அது மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் மட்டுமே இருந்தது.

இருப்பினும், இப்போது பொதுமக்கள் தங்கள் மருத்துவச் சான்றிதழைப் பெறலாம், கைரேகையைப் பதிவு செய்யலாம், உரிமத்தைப் புதுப்பிக்கத் தேவையான பணம் செலுத்தலாம் மற்றும் தற்காலிக உரிமத்தைப் பெறலாம், இவை அனைத்தும் நுகேகொடையில் உள்ள நிறுவனத்தில் மட்டுமே. இதற்கு 07 நிமிடங்கள் 47 வினாடிகள் மட்டுமே ஆகும் என்றும் அமைச்சர் கூறினார்.

நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் தற்காலிக ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் தொடக்க விழாவில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version