இலங்கை
கிளிநொச்சியில் இன்றும் வெடிக்காத கைக்குண்டுகள் மீட்பு
கிளிநொச்சியில் இன்றும் வெடிக்காத கைக்குண்டுகள் மீட்பு
கிளிநொச்சி – தட்டுவான் கொட்டி பகுதியில் இன்றும் வெடிக்காத நிலையில் வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இருவர் மோட்டார் செல் குண்டொன்றை பிரித்து வெடிமருந்தை எடுக்க முற்பட்ட நிலையில் குண்டு வெடித்ததில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன் போது, மேலும் சில வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை மீட்டெடுக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் பொலிஸார் அனுமதி கோரியுள்ளனர்.