இலங்கை
கெஹல்பத்தர பத்மேவின் துப்பாக்கியை வைத்திருந்த இருவர் கைது
கெஹல்பத்தர பத்மேவின் துப்பாக்கியை வைத்திருந்த இருவர் கைது
பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுக்கு சொந்தமான மைக்ரோ (Micro) ரக துப்பாக்கியை வைத்திருந்த இருவரை கைதுசெய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹெல்பத்தர பத்மேவை விசாரித்தபோது, தான் பயன்படுத்திய துப்பாக்கியை களனி – நாதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடம், கொடுத்து வைத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
[X4955ஸ]
அத்தகவலின் பேரிலே குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இச்சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்த சாரதியொருவரையும் கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.