இலங்கை

நாமலுக்கு எதிராக விரைவில் வழக்கு; எச்சரிக்கிறார் பிரதியமைச்சர்!

Published

on

நாமலுக்கு எதிராக விரைவில் வழக்கு; எச்சரிக்கிறார் பிரதியமைச்சர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எனக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவருக்கு எதிராக நான் வழக்குத் தாக்கல் செய்ய நேரிடும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதியமைச்சர் சுனில் வட்டகல எச்சரித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
நாமல் ராஜபக்ச எனக்கு எதிராக அண்மையில் கேள்வி கோரல் பத்திரம் அனுப்பியிருந்தார். இது தொடர்பில் அவர் எனக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும். இல்லையென்றால் நான் தொடருவேன். அதேவேளை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம். மக்கள் விடுதலை முன்னணியின் சட்டப் பிரிவில் உறுப்பினராகப் பதவி வகித்தார் என்று மக்கள் முன்னணியின் முன்னாள் உறுப்பினர் நந்தன குணதிலக கூறியிருப்பது முற்றிலும் பொய்யானது. கட்சியில் இருந்து விலகியதன் பின்னர் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக அவர் பேசுகிறார். நீதித்துறையின் சிரேஷ்டத்துவமிக்கவரான இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் மீது. போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு எதிராக அவர் சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வார்- என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version