இலங்கை
நிலக்கரி கருத்திட்டத்தில் 6 வாகனங்கள் மாயமானது எப்படி?
நிலக்கரி கருத்திட்டத்தில் 6 வாகனங்கள் மாயமானது எப்படி?
புத்தளம் நிலக்கரி கருத்திட்டத்திற்கான 12 கோடி ரூபாவுக்கும் அதிக தொகையில் கொள்வனவு செய்யப்பட்ட 6 வாகனங்களை இதுவரையில் கொந்தரத்துக்காரர் மின்சார சபைக்கு ஒப்படைக்கவில்லை என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.
கருத்திட்டம் நிறைவுறும் போது குறித்த வாகன உடன்படிக்கையின்படி மின்சார சபைக்கு மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்றபோதும், இதுவரையில் குறித்த வாகனங்கள் திருப்பி வழங்கப்படவில்லை.
இதன் மூலம் பொது சொத்து தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கோப் குழு மின்சார சபைக்கு தெரிவித்துள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை