இலங்கை
நெடுந்தீவில் வெகுவிரைவில் எரிபொருள் நிரப்புநிலையம்; இளங்குமரன் எம்.பி தெரிவிப்பு
நெடுந்தீவில் வெகுவிரைவில் எரிபொருள் நிரப்புநிலையம்; இளங்குமரன் எம்.பி தெரிவிப்பு
புதிய எரிபொருள் நிலையத்தை நெடுந்தீவில் அமைப்பதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் அதிகாரபூர்வமாகக் கையெழுத்தாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத காரணத்தால், அந்தப்பகுதிமக்கள் குறிகாட்டுவானுக்குச் சுமார் ஒரு மணித்தியாலம் படகில் சென்று, அங்கிருந்து வேலணைக்குத் தரைவழியாகச் சென்று எரிபொருள்களைக் கொள்வனவு செய்து மீண்டும் நெடுந்தீவுக்குச் செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது. மக்களது கோரிக்கையை அடுத்து, புதிய எரிபொருள் நிலையத்தை நெடுந்தீவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.