இலங்கை

மட்டுவில் விசேட பொருளாதார மத்திய நிலைய மீள் ஆரம்பம்!

Published

on

மட்டுவில் விசேட பொருளாதார மத்திய நிலைய மீள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலைய மீள் ஆரம்பிப்பு நிகழ்வு மட்டுவிலில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (30) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்  அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர் வசந்த சமரசிங்க பொருளாதார மத்திய நிலையத்தை நாடாவெட்டி திறந்து வைத்ததுடன், மொத்த விற்பனை வியாபாரத்தையும் விருந்தினர்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

Advertisement

இந்நிகழ்வில் வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராசா, ஜெ.றஜீவன், சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர், யாழ். மாவட்டச் செயலர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர்கள், விவசாய சம்மேளனப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version