இலங்கை
யாழில் மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்து இருவர் படுகாயம்
யாழில் மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்து இருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் உள்ள வைரவர் கோயில் சந்தியில், இன்று மாலை மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதி விபத்திற்கு உள்ளானது.
இந்த விபத்தில் இரு நபர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த நபர்கள் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.