இந்தியா

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்!

Published

on

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்!

நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ராகுல் காந்திக்கு  நேரடியாக கொடூரமான வகையில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம் எழுத்தியுள்ளது.

வாக்கு திருட்டு தொடர்பாக பா.ஜ.க.வையும், தேர்தல் ஆணையத்தையும் ராகுல் காந்தி  தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது.

Advertisement

இந்த சம்பவத்தில் பா.ஜ.க தலைவர்களும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனிடையே பா.ஜ.க செய்தி தொடர்பாளரான பிரிந்து மகாதேவ், மலையாள தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றினார்.

இதன்போது ”ராகுல் காந்தியின் மார்பில் சுடவேண்டும்” என தெரிவித்துள்ளார். இந்நிலையில் மகாதேவ்வின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் மக்களின் தலைவரான ராகுல் காந்திக்கு எதிராகத் தீட்டப்படும் கொடூரமான சதித்திட்டமா என கேள்வி எழுப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version