பொழுதுபோக்கு

விசாரணை முடிவு; ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கில் இன்று தீர்ப்பு

Published

on

விசாரணை முடிவு; ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து வழக்கில் இன்று தீர்ப்பு

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் – பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து செய்வது தொடர்பான வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. .கடந்த 2006-ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகனான இவர், தொடர்ந்து பொல்லாதவன், ஆடுகளம், தெறி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வாத்தி படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் தேசிய விருதை வென்றிருந்தார்.இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், மதயானை கூட்டம் என்ற படத்தை தயாரித்த ஜி.வி.பிரகாஷ், 2015-ம் ஆண்டு வெளியான டார்லிங் என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். தொடர்ந்து அடியே, நாச்சியார் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஜி.வி.பிரகாஷ் தற்போது இசை நடிப்பு என பிஸியான இருந்து வருகிறார். பல படங்களை கைவசம் வைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் கடந்த 2013-ம் ஆண்டு சைந்தவி என்ற பாடகியை திருமணம் செய்துகொண்டார்.அந்நியன் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான சைந்தவி கடைசியான மார்க் ஆண்டனி என்ற படத்தில் பாடியிருந்தார். ஜி.வி – சைந்தவி இருவருக்கும் திருமணமாகி 9 வருடங்கள் கடந்துள்ள நிலையில், சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பு தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் தங்கள் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து பெற விரும்புவதாக, ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில்,  இரு தரப்பின் கருத்துக்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பு செப்டபம்ர் 30-ந் தேதி அறிவிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார். இதில் குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று ஜி.வி.பிரகாஷ் கூறியிருந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version