பொழுதுபோக்கு
2 வாழ்க்கை வாழ்வதை விட்டுவிட்டேன்; 30 வயதை கடந்தது பற்றி சமந்தா உருக்கமான பதிவு!
2 வாழ்க்கை வாழ்வதை விட்டுவிட்டேன்; 30 வயதை கடந்தது பற்றி சமந்தா உருக்கமான பதிவு!
நடிப்பில் இருந்து சிறிது காலம் ஓய்வில் இருக்கும் நடிகை சமந்தா ரூத் பிரபு, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், தன்னைபற்றியும், , 20-களில் இருந்த பாதுகாப்பு இல்லாத நிலை, உணர்வில் இருந்து 30-களில் கிடைத்த அமைதி மற்றும் உண்மைத்தன்மைக்கு மாறியது பற்றியும் மனம் திறந்து எழுதியுள்ளார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:அந்த பதிவில்,”முப்பதுகளுக்குப் பிறகு எல்லாம் வீழ்ச்சிதான் என்று உலகம் உங்களுக்குச் சொல்கிறது. உங்கள் பொலிவு மங்கிவிடும், உங்கள் அழகு நீங்கிவிடும், நேரம் முடிந்துவிடுவது போல, இருபதுகளில் எல்லாவற்றையும் சாதிக்க அவசரப்பட வேண்டும். சரியான முகம், சரியான உடல், சரியான வாழ்க்கை. என்று உங்களை விரட்டுகிறது என்று கூறியுள்ளார்மேலும், பொதுவான வாழ்வைப் பற்றியும், குழப்பமான 20 வயதுப் பெண்ணாக இருந்து 30 வயதுப் பெண்ணாக மாறுவது பற்றியும் அந்தப் பதிவு தொடர்ந்து விவரிக்கிறது: “எனது இருபதுகள் சத்தமாகவும், அமைதியற்றதாகவும் இருந்தன. நான் அவசரத்துடன் கடந்து வந்தேன். போதுமான அளவு அழகாகத் தெரிய, போதுமானதாக உணர, போதுமானதாக இருக்க அவசரப்பட்டேன். நான் உள்ளுக்குள் எவ்வளவு தொலைந்து போனதாக உணர்ந்தேன் என்பதை யாரும் பார்க்கக் கூடாது என்பதற்காக அந்த வெளித்தோற்றத்தை தக்கவைக்க அவசரப்பட்டேன்.நான் ஏற்கனவே முழுமையானவள் என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை. நான் யார் என்பதை மாற்றிக் கொள்ளாமல், நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே உண்மையான அன்பு என்னைத் தேடி வரும் என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை. பிறகு என் முப்பதுகள் வந்தன. ஏதோ ஒன்று மென்மையாயிற்று. ஏதோ ஒன்று திறந்தது. பழைய தவறுகளின் பாரத்தை நான் இழுத்துச் செல்வதை நிறுத்திவிட்டேன். மற்றவர்களுடன் ஒத்துப் போக முயல்வதை நிறுத்திவிட்டேன். இரண்டு வாழ்க்கையை வாழ்வதை நிறுத்திவிட்டேன். ஒன்று நான் உலகிற்குக் காட்டியது, மற்றொன்று நான் அமைதியாக வாழ்ந்தது.ஓடுவதை நிறுத்திவிட்டு, இறுதியாகத் தனக்குள் வீடு திரும்பும் போது வரும் அமைதியை நான் அவளுக்கு (பழைய சமந்தாவுக்கு) விரும்புகிறேன். ஏனென்றால், நீங்கள் முழுமையாக நீங்களாக இருக்கும்போது மன்னிப்புக் கேட்காமல், வேடமிட்டு நடிக்காமல் உங்களை மட்டும் விடுவிக்கவில்லை. நீங்கள் உலகம் முழுவதையும் விடுவிக்கிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.A post shared by Samantha (@samantharuthprabhuoffl)சமந்தா ரூத் பிரபுவின் பணிகளைப் பொறுத்தவரை, அவர் அடுத்ததாக நெட்ஃபிக்ஸ் தொடரான ராக்கிட் ப்ரஹாமண்ட் தி ப்ளாடி கிங்டம் (Rakt Brahmand: The Bloody Kingdom) தொடரில் நடித்மது வருகிறார். சமந்தா தவிர, இந்தத் தொடரில் ஆதித்யா ராய் கபூர், அலி ஃபசல், வாமிகா கபி, ஜெய்¬தீப் அஹ்லாவத், ஸாகிர் ஹுசைன், விபின் ஷர்மா மற்றும் நிகிடின் தீர் ஆகியோரும் நடிக்கின்றனர்.