இலங்கை
ஆயுத பூஜை வழிபடுவதற்கான நல்ல நேரமும் வழிபடும் முறையும்
ஆயுத பூஜை வழிபடுவதற்கான நல்ல நேரமும் வழிபடும் முறையும்
நவராத்திரி விழாவின்நிறைவு நாளாக கொண்டாடப்படுவது சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையாகும்.
அசுரர்களை வதம் செய்வதற்காக அவதாரம் எடுத்து, கடும் தவம் புரிந்த அன்னை பராசக்தி, அனைத்து தெய்வங்களிடம் இருந்து பெற்ற பல விதமான சக்தி வாய்ந்த ஆயுதங்களை வைத்து பூஜை செய்து வழிபட்ட தினத்தை ஆயுத பூஜையாக நாம் கொண்டாடுவதாக புராணங்கள் சொல்கின்றன.
அப்படி பூஜை செய்த ஆயுதங்களைக் கொண்டு அம்பிகை, அசுரர்களுடன் போரிட்டு வெற்றி பெற்ற தினத்தையே விஜயதசமியாக கொண்டாடுகிறோம்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வழிபட முடியாதவர்கள் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமாவது வழிபடுவதால் நவராத்திரியின் அனைத்து நாட்களும் அம்பிகையை வழிபட்ட பலன் கிடைக்கும்.
[V2PDY
]
சரஸ்வதி பூஜை அன்று வீட்டில் உள்ள சரஸ்வதி தேவியின் படத்தை துடைத்து, பூக்களால் அலங்கரித்து, சந்தனம், குங்குமம் தொட்டு வைக்க வேண்டும். ஏதாவது ஒரு பயறு, சர்க்கரை பொங்கல் அல்லது ஏதாவது இனிப்பு, கிடைக்கும் பழங்கள், வெற்றிலை பாக்கு வைத்து வழிபட வேண்டும்.
மாணவர்கள் தாங்கள் படிக்கும் புத்தகங்கள், கலைஞர்கள் தாங்கள் பயன்படுத்தும் இசைக்கருவிகள், தொழிலாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் கருவிகள், வாகனங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்து அவற்றிற்கு பூஜை செய்து வழிபட வேண்டும்
காலை 09.10 முதல் 10.20 வரை
காலை 10.40 முதல் 11.50 வரை
மாலை 04.30 முதல் 05.30 வரை
மாலை 6 மணிக்கு மேல்
படிக்கும் மாணவர்கள் சிறிது நேரமாவது புத்தகங்களை எடுத்து படிக்க வேண்டும். அதே போல் கலைஞர்கள் அன்று, சரஸ்வதி தேவி முன் பாடல் இசைப்பது சரஸ்வதி தேவியின் அருளை முழுமையாக பெறுவது சிறப்பானதாக இருக்கும்.
மாணவர்கள், சரஸ்வதி தேவியின் அருளை பெறுவதற்குரிய சகலகலாவல்லி மாலை பதிகத்தை படிப்பது சிறப்பானதாகும். சரஸ்வதி தேவிக்குரிய மந்திரங்களை சொல்லி வழிபடுவதும் நல்லது. விஜயதசமி அன்று வெற்றியை பெறுவதற்காக அன்னை பராசக்தியை வழிபடுவது சிறப்பானதாகும்.