பொழுதுபோக்கு

இட்லி கடை ரிலீஸ்… தனுஷ் பேனருக்கு பீர் அபிஷேகம்; புதுச்சேரியில் ரசிகர்கள் கொண்டாட்டம்!

Published

on

இட்லி கடை ரிலீஸ்… தனுஷ் பேனருக்கு பீர் அபிஷேகம்; புதுச்சேரியில் ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் தனுஷ் இயக்கி, அவரே முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் இன்று (அக்டோபர் 1, 2025) உலகெங்கிலும் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் அருண் விஜய், ராஜ்கிரண், நித்யா மேனன், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.படத்தை வரவேற்கும் விதமாக புதுச்சேரியில் உள்ள ரசிகர்கள் உற்சாகமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். குறிப்பாக, பாண்டிச்சேரியில் உள்ள ஜீவா ருக்மிணி சினிமாஸ் திரையரங்கு வாசலில் வைக்கப்பட்டிருந்த தனுஷின் போஸ்டருக்கு ரசிகர்கள் பீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இட்லி கடை ரிலீஸ்… தனுஷ் பேனருக்கு பீர் அபிஷேகம்; புதுச்சேரியில் ரசிகர்கள் கொண்டாட்டம்!#IdliKadaiFromToday | #IdliKadai | #Dhanushpic.twitter.com/yoPO2oGYWUபாண்டிச்சேரியில் மட்டும் மொத்தம் 15 திரையரங்குகளில் ‘இட்லி கடை’ திரைப்படம் இன்று வெளியானது குறிப்பிடத்தக்கது. பல நாட்களாக ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இத்திரைப்படம், ரசிகர்களின் இத்தகைய கொண்டாட்டங்களால் மேலும் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது. புதுச்சேரியில் படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டபோது ரசிகர்கள் ஆரவாரம் செய்து, தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version